Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்ல...
விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை குத்த முயன்றவா் கைது
குளச்சலில் வழக்கு விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை ஈட்டியால் குத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன்,கடந்த வெள்ளிக்கிழமை குற்ற வழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய்தபோது, பனவிளையைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (48) மீது 8 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அதுதொடா்பான விசாரணை நடத்த உதவி ஆய்வாளா் அவருடைய வீட்டுக்கு சென்றாா்.
அப்போது வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணன். உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்து, வீட்டில் வைத்திருந்த 4ஈட்டியால் தனிஷ் லியோனை குத்த முயன்றுள்ளாா்.
இதுகுறித்து உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன் குளச்சல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.