செய்திகள் :

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

post image
`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலைய எஸ்.ஐ பிரணிதா. கடந்த 5 ஆம் தேதி  கையில் காயத்துடன் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தவர், ``ஆட்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் வந்த விசிக வடக்கு மாவட்டச்செயலாளர் இளையகவுதமன், என்னிடம் தகராறு செய்து, தாக்கியதில் காயமடைந்து மயக்கமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்" என்று புகார் தெரிவித்திருந்தார்.

காரைக்குடியில் பெண் எஸ்.ஐ, விசிக-வினரால் தாக்கப்பட்டதாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தகவல் பரவ, இது மக்கள் மத்தியிலும் அரசியல் தளத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து கருத்து தெரிவித்தார்கள். எம்.எல்.ஏவும், சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளருமான செந்தில்நாதன் மருத்துவமனைக்குச் சென்று எஸ்.ஐ பிரணிதாவுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், "இது பொய்யான புகார், நாங்கள் எஸ்.ஐ பிரணிதாவிடம் அப்படி நடந்துகொள்ளவில்லை, தன் மீதான குற்றச்சாட்டை மறைக்க இப்படி பொய்யான குற்றச்சாட்டைக் கூறுகிறார்" என்று எஸ்.பி-யிடமும் காரைக்குடி டி.எஸ்.பி-யிடமும் விசிக நிர்வாகிகள் புகார் தெரிவிக்க, உடனே விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவிட்டார்.

எஸ்.ஐ பிரணிதா

அதைத்தொடர்ந்து சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமராவதிப்புதூரில் உள்ள நிலம் சம்பந்தமாக இரு பிரிவினருக்கிடையே பிரச்னை உள்ள நிலையில், அந்த வழக்கு சம்பந்தமாக இரு பிரிவினரும் கடந்த 5 ஆம் தேதி சோமநாதபுரம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்தனர். இப்பிரச்னையை எஸ்.ஐ முத்துருகிஷ்ணன் விசாரித்துக் கொண்டிருந்தபோது, அப்போது வெளியிலிருந்து வந்த எஸ்.ஐ பிரணிதா, அந்த விசாரனையில் தேவையில்லாமல் தலையீடு செய்துள்ளார். அதை விசாரணைக்கு வந்த சிலர் எதிர்த்துள்ளனர். அதில் ஒரு தரப்பினருடன் சென்றிருந்த விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமனுக்கும், எஸ்.ஐ பிரணிதாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதோடு அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றபின்பு எஸ்.ஐ பிரணிதா, தன்னை இளைய கவுதமன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாகக் கூறி தனியார் மருத்துவமனையிலும் பின்பு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைகாகச் சேர்ந்தார். அவரை மருத்துவர்கள் சோதனை செய்து, உடல் நிலை நல்லபடியாக உள்ளது, அதனால் உள் நோயாளியாக அனுமதிக்கமுடியாது என்று கூறியுள்ளனர். ஆனாலும் அங்கிருந்து செல்லாமல் இருந்துள்ளார். காவல் நிலையத்திலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் தாக்குதல் சம்பவம் நடந்ததாகப் பதிவாகவில்லை. பொய் குற்றச்சாட்டு என்பது தெரியவந்தது. அது மட்டுமின்றி, இவர் மீதான சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் சிவகங்கை நகர் காவல் நிலையத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். ஆனால், அங்கு செல்லாமல் 48 நாட்கள் மருத்துவ விடுப்பில் இருந்துகொண்டு தொடர்ந்து சோமநாதபுரம் காவல் நிலையத்திலேயே பணியாற்றி வருகிறார்.

பெண்கள் மற்றும் பெண் காவல்துறையினருக்கு எதிரான குற்றங்களில் தனிக்கவனம் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் எஸ்.ஐ. பிரணிதாவின் குற்றச்சாட்டு பொய்யானது" என்று தெரிவித்துள்ளனர்.

புகார்களின் பேரில் உயர் அதிகாரிகளின் நடவடிக்கையால் சிவகங்கைக்கு இடமாறுதலில் செல்லாமல், இங்கேயே தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நாடகத்தை எஸ்.ஐ பிரணிதா நடத்தியுள்ளதாகச் சொல்லப்படும் நிலையில் அவரின் செயல்பாடுகள் குறித்து பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் சில தகவல்கள் வெளியாகி காரைக்குடி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

வி.சி.க

இது குறித்து விசிக வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய கவுதமனிடம் கேட்டதற்கு, "30 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் உள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் பிரச்னைகளுக்காக ஜனநாயக வழியிலும், சட்ட ரீதியிலும் போராட்டங்கள் நடத்தியுள்ளோம். காவல் நிலையம் சென்று நியாயத்துக்காக பேசியுள்ளோமே தவிர, வன்முறையாகச் செயல்பட்டது கிடையாது. என்னைப்பற்றி மாவட்ட மக்களுக்கும், மற்ற அரசியல் கட்சியினருக்கும் நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும்போது ஊர் சம்பந்தப்பட்ட பொதுப்பிரச்னைக்காக காவல் நிலையம் சென்றிருக்கும்போது அப்படி நடக்க முடியுமா? எங்கள் ஊருக்கு வரும் முக்கியமான திட்டத்தை வரவிடாமல் செய்ய எங்க ஊரைச் சேர்ந்த சிலர் பிரச்னை செய்கிறார்கள். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தச் சென்றிருந்தோம். அப்போது இந்த விவகாரத்தில் தலையிட்டு தேவையில்லாமல் பேசிய எஸ்.ஐ பிரணிதாவிடம் வாக்குவாதம் செய்தோம்.

அவரைப்பற்றி எஸ்.பி-யிடம் புகார் தெரிவிப்போம் என்று கூறி கிளம்பினோம். அதைத்தொடர்ந்து காரைக்குடி டி.எஸ்.பி-யை சந்தித்து முறையிட்டபோதுதான், இந்த எஸ்.ஐ இப்படி ஒரு டிராமாவை நடத்தி எங்கள் மீதும், விசிக மீதும் அவதூறு பரப்பியது தெரியும். உடனே டி.எஸ்.பி-யிடமே எஸ்.ஐ குறித்து புகார் தெரிவித்தோம். அதோடுதான் உடனே விசாரித்து இதை பொய் புகார் என்பதை உறுதி செய்தார்கள். என் உறவினரின் குடும்பத்துக்குள் எஸ்.ஐ பிரணிதா தலையிடுவது குறித்து ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தோம், அதைத்தொடர்ந்துதான் அவருக்கு இடமாறுதல் உத்தரவு வந்தது. அந்தப் பகையை மனதில் வைத்துக்கொண்டும், எங்களைப் பிடிக்காத சிலரின் தூண்டுதலில் இப்படி ஒரு பழியை எங்கள் மீது சுமத்தி இப்போது அவரே சிக்கிக் கொண்டார், இருந்தாலும் அவதூறு பரப்பிய அவர் மீது வழக்கு போடுவேன், இந்த உண்மை தெரியாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் உடனே கருத்து தெரிவித்துள்ளதை என்னவென்று சொல்வது" என்றார்.

தொடர்ந்து எஸ்.ஐ பிரணிதாவிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தகவல் வருகிறது.

இதுகுறித்து பேசுவதற்காக எஸ்.ஐ பிரணிதாவைத் தொடர்பு கொண்டோம். அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது. அவர் தரப்பு விளக்கத்தைக் கொடுக்கும் பட்சத்தில் அதை வெளியிடவும் தயாராக உள்ளோம்

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்.போலீஸானஇவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க

விருதுநகர்: 40 பவுன் திருட்டு நகை, துப்பாக்கி... வசமாகச் சிக்கிய காவலர்; மர்மநபருக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

ஊட்டி: கடமானை வேட்டையாடி, உப்புக் கண்டம் போட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை பதப்படுத்த உப்புக் கண்டம் போட்டு வருவதாக வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள... மேலும் பார்க்க