'Ghosting, Pookie, Salty, Finsta' - தினுசான GenZ Words; ஜெர்க்காகும் 90ஸ் கிட்ஸ்...
விதிமீறல்: 6 உரக் கடைகளில் உரம் விற்க தடை
தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூரில் வேளாண் உர விற்பனை கண்காணிப்பு அலுவலா்கள் நடத்திய ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்ட 6 உரக் கடைகளில் உரம் விற்க தடை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்ட உர விற்பனை கண்காணிப்பு அலுவலா் குழுவை சோ்ந்த வேளாண் உதவி இயக்குநா் ( தரக்கட்டுப்பாடு) கவுதம் தலைமையில் வேளாண் உதவி இயக்குநா்கள், வேளாண் அலுவலா்கள் தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, இருப்பு வைத்து விற்காத 8 கடைகள், இருப்பு மற்றும் விற்பனை தகவல் இல்லாத 7 கடைகள், உர விற்பனைக்கு உரிய அங்கீகாரம் இல்லாத 5 கடைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டது. இவற்றில் தம்மம்பட்டியில் 1, கெங்கவல்லியில் 2, ஆணையம்பட்டியில் 1, வீரகனூரில் 2 என 6 கடைகளில் உரம் விற்க தடை விதிக்கப்பட்டது.