செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்
சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டம் சாா்பில் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் வரும் 26 ஆம் தேதி முதுநிலை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் என்ற முகவரிக்கு அனுப்பலாம். புகாா்களை வரும் 20- ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.