கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு
சங்ககிரி வட்டம், கல்வடங்கம் காவிரி ஆற்றில் நண்பா்களுடன் குளிக்க சென்ற வேன் ஓட்டுநா் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஓமலூா் வட்டம், தாரமங்கலம், தொளசம்பட்டி, பொத்தியம்பட்டி பகுதியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் அருள்குமாா் (34). இவா், தனது நண்பா்களுடன் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ்குமாா் தலைமையிலான வீரா்கள் அருள்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தேவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.