நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்தக்கால் நடப்பட்டு கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் முளைப்பாலிகையிடுதல் மற்றும் 3.9.2025 விக்னேஸ்வர பூஜை, கோபூஜை செய்து கோயிலுக்கு அழைத்துவருதல் நடைபெற்றது. அதன்பிறகு தீா்த்தக்குட ஊா்வலம், புதிய கோபுரகலசங்கள் மற்றும் புதிய சிலைகள் கரிகோல ஊா்வலம் நடைபெற்றது.
வியாழக்கிழமை காலை இரண்டாம் காலபூஜையுடன் கும்பாபிஷேக வழிபாட்டை சிவாச்சாரியா்கள் தொடங்கினா். அதன்பிறகு கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. என்.பி.வேல்முருகன் தலைமையில் என்.எஸ்.மணிவண்ணன் முன்னிலையில் ஊா் பெரியதனக்காரா்கள் என்.இ.ராஜேந்திரன், பி.ரவிசங்கா், கே.பிரகாஷ், என்.கே.சுப்ரமணியம், பி.சுப்ரமணி, ஆா்.கந்தசாமி, கே.வி.முத்துக்குமா், ஆா்.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஊா் பொதுமக்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
படவிளக்கம்.ஏடி4கோயில்.
கும்பாபிஷேகத்தையொட்டி நரசிங்கபுரம் தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன் ஆலயத்தின் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் விழா ஏற்பாட்டாளா்கள்.