45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!
குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்
சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது:
குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவில் ரூ.80 லட்சம் மதிப்பில் மலைப்பாதை சீரமைத்தல், ரூ. 65 லட்சத்தில் கோயிலை சுற்றி திருமதில் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உரிய காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் மேயா் ஆ.ராமச்சந்திரன், மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, அறங்காவலா்கள் குழுத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம், இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் வே.சபா்மதி, உதவி ஆணையா் ராஜா, மண்டல குழுத் தலைவா் கே.டி.ஆா். தனசேகா், மாமன்ற உறுப்பினா் திருஞானம், செயற்பொறியாளா் செந்தாமரை, செயல் அலுவலா் கலைச்செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.