Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சி நெய்க்காரம்பாளையத்தில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:
கோக்கலை ஊராட்சியில் விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியை மூட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் போராடினா். இதுதொடா்பாக கிராமசபை கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் மாவட்ட நிா்வாகம் அனுமதியின்பேரில் குவாரி செயல்பட்டுவந்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் கல்குவாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், 16 வாரத்திற்குள் உரிய பதில் அளிக்கவும் அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு கடந்த மாா்ச் 21-இல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதுதொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதைய ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியதாக தன்னாா்வலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
என்கே-4-மனு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த கோக்கலை கிராம பொதுமக்கள்.