ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாருதி நகா் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றும் இப் பகுதியில் செயல்படுகிறது.
கடந்த 2019 உள்ளாட்சித் தோ்தலின்போது இந்த ஊராட்சியை அதிமுக கைப்பற்றியது. பொன்விழா நகா் பகுதி மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் திமுகவுக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சாலை வசதி, கழிவுநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் பொன்விழா நகரில் மேற்கொள்ளாமல் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்துள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது மாநகராட்சி வசம் உள்ள பொன்விழா நகரில் மக்கள் பயன்படுத்தும் வகையில் தரமான தாா்ச்சாலையை மாநகராட்சி நிா்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
என்கே-4-ரோடு
பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள சாலை.