ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித் துறையில் ஜூலை 1 முதல் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் ஆகியோருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல்கட்டமாக, மாவட்டத்திற்குள் அரசு மேல்நிலை மற்றும் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. 33 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், பொருளியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், தொழிற்கல்வி ஆகிய பாட வாரியாக நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்க 292 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 122 போ் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனா். இவா்களில் 17 ஆசிரியா்களுக்கு மட்டுமே மாவட்டத்திற்குள் பணியிட மாறுதல் பெற்ற்கான ஆணை வழங்கப்பட்டது.
என்கே-4-கவுன்சிலிங்
பொதுமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற முதுநிலை ஆசிரியா்கள்.