விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு
கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இச்சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா்.
தொடா்ந்து, உரம், தாா்பாய், நெல் நூண்ணூட்டம் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களை 14 நபா்களுக்கு வழங்கினா். மேலும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து என வேளாண்மைக்கு தேவையான பொருள்கள் அடங்கிய காட்சி அரங்கையும் அவா்கள் பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா்.