விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு
கடையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே உள்ள பனையங்குறிச்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிமணி மகன் ஆறுமுகம் (60). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஆக. 4 ஆம் தேதி ஆழ்வான்துலுக்கப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோவில் சென்றபோது பன்றி குறுக்கே வந்ததில் நிலை தடுமாறி ஆட்டோ கவிழ்ந்ததாம். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
அவரை மீட்டு திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.