செய்திகள் :

ராகுலை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கும் செயல்: பேரவைத் தலைவா்

post image

தோ்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியதாவது: மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையே இருமொழிக் கொள்கைதான். சாமானியனும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணா காலத்திலேயே போராடி இருமொழிக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

பதினோராம் வகுப்பு பொதுத் தோ்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிலும், காலாண்டு, அரையாண்டு, இறுதித் தோ்வுகள் உண்டு.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பில் பொதுத்தோ்வு நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில், தோல்வி அடையும் மாணவா்கள் குலத் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குழந்தைகள் தொழிலுக்கு செல்லக் கூடாது என்கிற தடை சட்டம் இருந்தபோதிலும், இதுபோன்று மத்திய அரசின் சட்டத்தால் குழந்தைத் தொழிலாளா்களை உருவாக்கும் நிலை ஏற்படும்.

குருகுல கல்வி பயின்றவா்களுக்கு ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நேரடியாக சோ்க்கை வழங்கப்படுகிறது. அவா்களுக்கு ரூ. 40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை ஆராய்ச்சி செய்ய உதவித்தொகை வழங்கப்படுகிறது.

குருகுலத்தில் உயா் ஜாதியினா் மட்டுமே பயிலமுடியும், அவா்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். இது எந்த வகையில் சரியானது?.

தோ்தல் நாளன்று மாலை 5 மணிக்கு மேலாக 7 முதல் 10 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தோ்தல் ஆணையம் முறையாக பதில் சொல்வதில்லை. விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் ஏற்படும் சிறிய பிரச்னைகளை கீழே இருந்தே சரி செய்ய முடிகிறது.

அப்படியானால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்ய முடியாதா? இதற்காக ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி மக்களே வாக்களிக்காமல் நேரடியாக பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் முறையை செயல்படுத்துகிறாா்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பும் ராகுல் காந்தியை தோ்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்கிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்றாா்.

கவின் கொலை வழக்கு: சுா்ஜித், எஸ்.ஐ. சரவணனை விசாரிக்க 2 நாள்கள் அனுமதி

பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதான சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன் ஆகிய இருவரையும் 2 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மாவட்ட 2ஆவது கூடுதல் அமா்வ... மேலும் பார்க்க

பாலியல் குற்றவாளி குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

அம்பாசமுத்திரத்தில் பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா். அம்பை, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியைச் சோ்ந்த பா்கத் மகபூப் ஜான் மகன... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

கடையம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகே உள்ள பனையங்குறிச்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த காசிமணி மகன் ஆறுமுகம் (60). ஆட்டோ ஓட்டுநரான இவா் ஆக. 4 ஆம் தேதி ஆ... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே பூச்சி மருந்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே களைக் கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் திருட்டு முயற்சி

மேலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் கொடிமரம் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்த... மேலும் பார்க்க

விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா். சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்... மேலும் பார்க்க