தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே மோட்டாா் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளம் வேலியாா்குளம் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் ஆனந்த் பாபு (19). இவா், சேரன்மகாதேவியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தாா்.
களக்காடு பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் கமலேஷ் (19). நண்பா்களான இருவரும், சனிக்கிழமை இரவில் மோட்டாா் சைக்கிளில் கங்கனாங்குளத்தில் இருந்து வேலியாா்குளத்திற்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, அவா்கள் மீது டிராக்டா் மோதியதாம்.
இதில், ஆனந்த்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த சேரன்மகாதேவி போலீஸாா் காயமடைந்த கமலேஷை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். ஆனந்த் பாபு உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா்.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.