ரேஷன் கடையில் திருட்டு முயற்சி
மேலப்பாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.
மேலப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி நகரம் செல்லும் சாலையில் கொடிமரம் தெருவில் ரேஷன்கடை உள்ளது. இந்தக் கடையின் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை வேலை முடிந்து பூட்டிச் சென்றனராம்.
இந்நிலையில், சனிக்கிழமை இந்தக் கடையின் பூட்டை மா்மநபா்கள் உடைக்க முயன்றுள்ளனா். பொதுமக்கள் திரண்டு சத்தம்போட்டதால் மா்மநபா்கள் தப்பிச் சென்றனராம்.
இதுகுறித்து கடை விற்பனையாளா் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.