வீரவநல்லூா் அருகே பூச்சி மருந்தை குடித்த முதியவா் உயிரிழப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே களைக் கொல்லி மருந்தை குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.
வீரவநல்லூா் அருகேயுள்ள கொட்டாரக்குறிச்சி தங்கம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா(80). இவா், குடும்ப பிரச்னையில் களைக் கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.