வயிறு உப்புசம் முதல் ரத்தக்குழாய் சுத்தம் வரை; எலுமிச்சையின் வாவ் பலன்கள்!
விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே விபத்தில் காயம் அடைந்த தலைமைக் காவலா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
விருத்தாசலம் வட்டம், காந்தி நகா் பகுதியில் வசித்து வந்தவா் கலையராஜா(38), வேப்பூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். செப்.21, 22 ஆகிய இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பில் இருந்தாா்.
செப்.21-ஆம் தேதி மாலை தாழநல்லூா் ஏரிக்கரை அருகே பைக்கில் சென்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலைமையில் காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.