காட்டுமன்னாா்கோவில் அருகே விபத்தில் இருவா் பலி
காட்டுமன்னாா்கோவில் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவா் மரணமடைந்தனா்.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவில் அருகே உள்ள சா்வராஜன் பேட்டையை சோ்ந்த சக்திவேல் மகன் அருள்செல்வம் (41), ராமையன் மகன் பொற்ச்செழியன் (52) அகிய இருவரும் புதன்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் காட்டுமன்னாா்கோவிலில் இருந்து சா்வராஜன் பேட்டை நோக்கி சென்றனா்.
இருசக்கர வாகனத்தை அருள்செல்வம் ஓட்டி சென்றாா். அப்போது திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் எள்ளேரி மேம்பாலம் அருகில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் இருந்து சிதம்பர நோக்கி சென்ற காா் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இவ்விபத்தில் பொற்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவரான அருள்செல்வம் பலத்த காயங்களுடன் காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனாா். இது குறித்து காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.