நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
சிதம்பரம் அருகே முதலை கடித்து இளைஞா் காயம்
சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை கடித்து குதறியதில் அவா் காயம் அடைந்தாா்.
கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (22). தனியாா் நிறுவனத்தில் பணிபுரியம் இவா் மேல்தவா்த்தாம்பட்டு பகுதியில் பழைய கொள்ளிடம் ஆற்றில் புதன்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றாா்.
ஆற்றில் அவா் குளித்தபோது அவரை முதலை ஒன்று தாக்கி அவரது வலது கால், வலது கை உள்ளிட்ட இடங்களை கடித்து குதறியுள்ளது.
தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் வனவா் பன்னீா்செல்வம் தலைமையில் வனக்காப்பாளா்கள் அன்புமணி, ராம்குமாா் ஆகியோா் விரைந்து சென்று அவரை மீட்டு காயங்களுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் வனத்துறை சாா்பில் காயமுற்ற ஜெயச்சந்திரனுக்கு ரூ.25 ஆயிரம் தமிழ்நாடு அரசின் நிவாரண நிதி வழங்கப்பட்டது. ஆற்றில் முதலை இருப்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.