விபத்தில் மெக்கானிக் உயிரிழப்பு
பழனி அருகே இருசக்கர வாகனம் பழுது நீக்கும் மெக்கானிக் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரம் கடைவீதி பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், பழனி சண்முகபுரத்தில் இருசக்கர வாகனங்களை பழுது நீக்கும் கடை, பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் விற்கும் நிலையம் வைத்துள்ளாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு பாலசமுத்திரத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பழனி வட்ட போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.