செய்திகள் :

வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

post image

வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் விபா புயல் இன்று கரையை கடந்துள்ளது. இதன் காரணமாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாமில் விபா புயல் இன்று (ஜூலை 22) காலை 10 மணியளவில் 64-102 கிலோ மீட்டர் (40-63 மைல்) வேகத்தில் காற்றுடன் கரையைக் கடந்தது. மேலும் மணிக்கு 138 கிமீ(86 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபா புயல் ஒரே இரவில் பலவீனமடைந்துள்ளது. இருப்பினும் ஹனோயின் கிழக்கே உள்ள ஹங் யென் மாகாணத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காரணமாக தலைநகர் ஹனோயின் வீதிகள் வெறிச்சோடியது.

வடக்கு வியட்நாமில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, துறைமுக நகரமான ஹை போங் மற்றும் குவாங் நின் மாகாணத்தில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 150,000 ஹெக்டேர் (370,000 ஏக்கர்) மீன் வளர்ப்பு பண்ணைகள், 20,000-க்கும் மேற்பட்ட மிதக்கும் மீன் கூண்டுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாக மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபா புயல் கனமழை உள்நாட்டிற்குள் நகர்வதால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் பிலிப்பின்ஸில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவசரகால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் மற்றும் 10 மாகாணங்களில் உள்ள பெரும்பாலான அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இன்று மூடப்பட்டன,

விபா புயலுக்கு இதுவரை மூன்று பேர் உயிரிழந்தனர். தாழ்வான இடங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் தண்ணீரில் மூழ்கிய கிராமங்களில் உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Tropical Storm Wipha made landfall in northern Vietnam on Tuesday, bringing strong winds and heavy rain to parts of the country's north and central regions.

இஸ்ரேல் விமான நிலையத்தைக் குறிவைத்து ஹவுதி தாக்குதல்!

இஸ்ரேலுக்குச் சொந்தமான முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று (ஜூலை 22) தாக்குதலில் ஈடுபட்டனர். யேமன் நாட்டின் துறைமுகங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் ந... மேலும் பார்க்க

தலைப்புச் செய்தியான கோல்ட்பிளே கிஸ் கேமரா விடியோ! ஆஸ்ட்ரோனமர் நிறுவனத்தின் வேலை என்ன?

அமெரிக்காவில், கோல்டுபிளே நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஆஸ்ட்ரோனமரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஆன்டி பைரன், மனிதவள அதிகாரி கிறிஸ்டின் கபோட்டுடன் இருந்தபோது பதிவான விடியோ வைரலான நிலையில்,... மேலும் பார்க்க

11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?

தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.இதில் 7,700க்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷிய நாட்டிற்குச் சொந்தமானவை என்ற... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்து: 20 போ் உயிரிழப்பு; 171 போ் காயம்

டாக்கா: வங்கதேசத்தில் பள்ளிக் கட்டடம் மீது போா் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 20 போ் உயிரிழந்தனா். 171 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக வங்கதேச ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில்... மேலும் பார்க்க

இஸ்ரேலுக்கு பிரிட்டன், 24 நாடுகள் கண்டனம்

லண்டன்: காஸாவில் இஸ்ரேல் அரசின் உணவுப் பொருள் விநியோக முறை ஆபத்தானது என்று பிரிட்டன் உள்ளிட்ட 24 நாடுகள் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளன.இது குறித்து அந்த நாடுகள் கூட்டாக வெளியிடடுள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க

ஜப்பான் மேலவை தோ்தலில் ஆளுங்கட்சி தோல்வி

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழந்தாலும் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று பிரதமா் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ள... மேலும் பார்க்க