”திமுக-வுக்கு 8 மாதம்தான் ஆயுள்; இப்போதாவது நீட் ரத்து ரகசியத்தை சொல்லலாமே!”- எ...
11,000 யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள்! காரணம் என்ன?
தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.
இதில் 7,700க்கும் மேற்பட்ட சேனல்கள் சீனா மற்றும் ரஷிய நாட்டிற்குச் சொந்தமானவை என்றும், அமெரிக்க கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் விடியோக்களை தொடர்ந்து அவை வெளியிட்டு வந்ததாகவும் யூடியூப் விளக்கம் அளித்துள்ளது.
யூடியூப் நீக்கிய பெரும்பாலான சேனல்களின் விடியோக்கள் சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. அவை பெரும்பாலும் சீன அரசு மற்றும் அந்நாட்டு அதிபர் ஸி ஜின்பிங்க்கிற்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வகையில் இருந்ததாக கூகுள் குறிப்பிட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக நீக்கப்படட் சேனல்களில் 2,000 சேனல்கள் ரஷிய மொழியில் விடியோக்களை வெளியிட்டுள்ளன. இவை ரஷியாவுக்கு ஆதரவான பார்வைகளைப் பகிர்ந்ததோடு மட்டுமின்றி நேட்டோ, உக்ரைன், மேற்கு நாடுகளை விமர்சிக்கும் வகையில் விடியோக்களை வெளியிட்டுள்ளன.
கூகுளுக்குச் சொந்தமான பகுப்பாய்வுக் குழுவினர், உலக அளவிலான இணைய அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் தளத்தை எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், நேர்மையானதாக வைத்துக்கொள்ளும் பொருட்டு இப்பணிகளைச் செய்து வருவதாக யூடியூப் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். 2025 மே மாதத்திலேயே 20 யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியிருந்தது. இதில் 4 சேனல்கள் விளம்பரங்களுக்கானவை, ஒன்று ரஷியாவுக்குச் சொந்தமானது. கடந்த 2022ஆம் ஆண்டு உன்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்குப் பிறகு அந்நாட்டுக்குச் சொந்தமான முக்கிய பல யூடியூப் சேனல்களை கூகுள் முடக்கியிருந்தது.
மற்ற நாடுகளிலும் நீக்கம்
சீனா, ரஷியா மட்டுமின்றி, பிரசார நோக்கத்தில் செயல்பட்ட மற்ற சில நாடுகளுக்குச் சொந்தமான யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது. ஈரான், அஜர்பைஜான், துருக்கி, இஸ்ரேல், ரோமானியா மற்றும் கானா ஆகிய நாடுகளுக்குச் சொந்தமான சேனல்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆர்மீனியா நாட்டின் மீதான தாக்குதலின்போது, 457 சேனல்கள் அஜர்பைஜான் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரசார நோக்கத்தில் விடியோக்களை வெளியிட்டுள்ளன.
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் யூடியூப் சேனல்கள், ப்ளாக், விளம்பரங்கள் என 30,000 கணக்குகளை கூகுள் நீக்கியுள்ளது. இது பொய் பிரசாரங்கள் மற்றும் தவறான தகவல்களுக்கு எதிரான தொழில்நுட்ப நிறுவனத்தின் போராட்டத்தை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது.
இதையும் படிக்க | விவோ எக்ஸ் 200 எஃப்இ விற்பனை நாளை முதல் இந்தியாவில் தொடக்கம்!