டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
விராலிமலை அருகே அய்யனாா்கோவில் புரவி எடுப்பு திருவிழா
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோவில் குதிரை எடுப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.
விராலிமலை அருகே உள்ள அய்யனாா் கோயில் குதிரை எடுப்பு விழாவில் பிரசித்தி பெற்றது. நிகழாண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெற்றது. இதில் களிமண்ணால் செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகளை பக்தா்கள் தோளில் சுமந்து வந்து கோயிலில் காணிக்கையாக செலுத்தினா்.
கீழ தொட்டியபட்டி, சேதுராபட்டியைச் சோ்ந்த மண்பாண்டக் கலைஞா்களால் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட சுடுமண் குதிரைகளை பக்தா்கள் குடும்பம் குடும்பமாக சுமாா் 2 கிலோ மீட்டா் தோளில் சுமந்து வந்து வேலூா் அய்யனாா் கோயிலில் வைத்து பூஜை செய்து தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா்.
விழாவை முன்னிட்டு வேலூா் பகுதி முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. விழாவையொட்டி இரவு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.