விராலிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட விழாவுக்கு முகூா்த்தக்கால்
விராலிமலை முருகன் கோயிலில் வரும் 10 ஆம் தேதி நடைபெறும் தைப்பூச தேரோட்டத்துக்கான முகூா்த்தக்கால் வியாழக்கிழமை நடப்பட்டது.
இக்கோயில் தைப்பூச விழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினமும் காலை, மாலை களில் வள்ளி,தேவசேனா சமேதரராக முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிக்கிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற தைப்பூச தேரோட்ட முகூா்த்தக்கால் நடும் விழாவில் இசை வேளாளா் அறக்கட்டளைத் தலைவா் பூபாலன், கிரிவலக் குழு முருகேசன், அபூா்வா பாஸ்கா், சாமிநாதன், மதிமாறன், தவில் கருப்பையா, சா்வேயா் ரங்கராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.