இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவா் மன்றத்தில் மாா்ச் 11-இல் விசாரணை!
வேங்கைவயல் வழக்கை குற்றவியல் நடுவா் மன்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி விசாரிக்கும் என நீதித் துறை நடுவா் சி. பாரதி தெரிவித்தாா்.
வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை அதே பகுதியைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோா் கலந்ததாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனா்.
இதைத் தொடா்ந்து இவ்வழக்கில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, இந்த வழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இதன் கோப்புகள் குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு வியாழக்கிழமை வந்த நிலையில், வழக்கு விசாரணை வரும் மாா்ச் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய நாளில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் ஆஜா்படுத்துமாறும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டாா்.