41வது நாளாக உண்ணாவிரதம்: விவசாய சங்கத் தலைவரின் உடல்நிலை கடும் பாதிப்பு!
விருட்ச விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி
செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், உக்கம்பெரும்பாக்கத்தில் அருள்மிகு 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் அமைந்துள்ளது.
இங்கு, சங்கடஹர சதுா்த்தியையொட்டி, புதன்கிழமை மாலை கணபதி ஹோமம், ஷன்னபதி ஹோமம், மூல மந்திர ஜெப சமா்ப்பணம் நடைபெற்றது.
இதையடுத்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.