போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!
விலை குறைந்ததால் கால்நடைகளுக்கு தீவனமாகும் தக்காளி பழங்கள்
விலை குறைந்ததால் தக்காளி பழங்கள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றன.
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா், மொரப்பூா், அரூா், கடத்தூா், பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டிப்பட்டி, தீா்த்தமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நடப்பு பருவத்தில் தக்காளி செடிகளை நடவு செய்தனா்.
வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ததால், நிலத்தடி நீா்மட்டம் ஓரளவுக்கு உயா்ந்தது. தண்ணீா் பிரச்னை இல்லாததால் ஏராளமான இடங்களில் தக்காளி உற்பத்தி அதிகரித்தது. விளைச்சல் அதிகமானதால், தக்காளியின் விலை வெகுவாக குறைந்து கிலோ ரூ. 10-க்கும் குறைவாக விற்பனையாகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தக்காளியை அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காததால், அறுவடை செய்யாமல் நிலத்திலேயே விட்டுள்ளனா். மேலும், கால்நடைகளை நிலத்தில் கட்டிவைத்து தக்காளி பழங்களை அழிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.