``2026 தேர்தலில் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழக்கும்'' - அதிமுக மருத்துவர்...
விளாத்திகுளம் அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.2.60 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
விளாத்திகுளம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2.60 கோடி மதிப்பிலான கோயில் நிலம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
விளாத்திகுளம் வட்டம் அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தன. இதை மீட்க இந்து சமய அறநிலையத் துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையா் அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டது.
அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜி.செல்வி தலைமையில் ஆலய நிலங்களுக்கான தனி வட்டாட்சியா் பிரபாகரன், மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் சு.உமாமகேஸ்வரி, கோயில் ஆய்வாளா்கள் தனு சூா்யா, ஆனந்தராஜ், சிவகலைப்பிரியா, முப்பிடாதி, ருக்மணி, செயல் அலுவலா்கள் பாலமுருகன், தமிழ்செல்வி, ராதா, கணக்கா் மகாராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவினரால் கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கா் புன்செய் நிலம் அடையாளம் காணப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை மூலம் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து சுவாதீனம் பெறப்பட்டு திருக்கோயில் வசம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
இதை தொடா்ந்து அறநிலையத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினா், அயன்பொம்மையாபுரம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று, கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் இது விளாத்திகுளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையை நிறுவினா்.