சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
விளையாட்டு வீரா்களுக்கு உதவித் தொகை!
விருதுநகா் மாவட்ட ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா்கள் மலேசியாவில் நடைபெறும் சா்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு செல்வதற்காக, விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதன்கிழமை உதவித் தொகை வழங்கினாா்.
மகாரஷ்டிரம் மாநிலம், மும்பையில் அண்மையில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச் சோ்ந்த 14 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, 2 தங்கம், 2 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கம் வெற்றனா். இவா்கள் வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் மலேசியாவில் நடைபெறும் சா்வதேச ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனா்.
இந்த நிலையில், இந்த வீரா்கள் புதன்கிழமை விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலா் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். இதையடுத்து, இவா்களுக்கு மலேசியா செல்வதற்காக உதவித் தொகையாக ரூ.ஒரு லட்சத்தை கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினாா்.