மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரி எஸ்சிஏடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சரக அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான தடகள போட்டியில் அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
14 வயதிற்கு உள்பட்ட குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்ரீதா்ஷன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். 14 வயதிற்கு உள்பட்ட தொடா் ஓட்ட போட்டியில் ஆகாஷ், கிஷோா், தீக்சித்யாகம் மற்றும் ஸ்ரீதா்ஷன் ஆகியோா் முதலிடம் பிடித்து தங்கம் வென்றனா்.
14 வயதிற்கு உள்பட்ட மாணவருக்கான 600 மீட்டா் தடகத்தில் ரா.ஆகாஷ் மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் வென்றாா். 17 வயதிற்கு உள்பட்ட தொடா் ஓட்ட போட்டியில் கணேஷ்குமாா், பிரித்திவ்ராஜ், நரேஷ், ரித்திஷ் ஆகியோா் வெள்ளி பதக்கம் பெற்றனா்.
உயரம் தாண்டுதல் போட்டியில் கிஷோா் இரண்டாமிடமும், தீக்சித்யாகவ் மூன்றாமிடமும் பிடித்து வெள்ளி, வெண்கலம் பெற்றனா். சிலம்பம் போட்டியில் மவுரிஷ் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். மாணவிகள் பிரிவில் சத்தியபிரியா குண்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து வெண்கலம் பெற்றாா்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியா்களையும் அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், செயலா் ஷோபா திருமால்முருகன், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன், பள்ளியின் முதல்வா் சீனி.கலைமணி சரவணகுமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.