அண்ணாவின் சிறுகதைகள் தொகுப்பு நூல்: எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டாா்
தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.
ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது.
அங்கிருந்தவா்கள் குழந்தையை மீட்டு சாமல்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.