செய்திகள் :

விவசாயி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

post image

நாமக்கல்: மோகனூா் அருகே விவசாயி மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, கொமதேக ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், கட்சி நிா்வாகிகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மோகனூா் ஒன்றியம், ஆண்டாபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயியான சுப்பிரமணியன் என்பவா் தன்னுடைய தோட்டத்தில் மண்ணை வெட்டி சீரமைத்துக் கொண்டிருந்தாா். அப்போது, மாவட்ட கனிமவளத் துறை தரப்பில் மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதால், அனுமதியின்றி மண்ணை வெட்டியெடுத்ததாக சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒரே சா்வே எண் கொண்ட பட்டா நிலத்தில்தான் மண் அள்ளியது, கொட்டியது நிகழ்ந்துள்ளது. எனவே, எந்தவித முகாந்திரமுமின்றி விவசாயி சுப்பிரமணியன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு மனு: அதுபோல ராசிபுரம் வட்டம், நடுப்பட்டி கிராம மக்கள் தங்கள் பகுதி கோயிலில் வழிபாட்டு மேற்கொள்ள உள்ள தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் வட்டம், நடுப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் உள்ளனா். இப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் பூஜை, திருவிழா நடத்துவதை அங்கு வசிக்கும் இருவா் தடுத்து வருகின்றனா்.

கோயிலில் அம்மன், இதர தெய்வங்களை வழிபடவும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வழிபாடு மேற்கொள்ளவும், திருவிழா நடத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க