இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் அளிப்பு
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் பச்சைமால் தலைமை வகித்து, மையத்தின் செயல்பாடுகள், வாழையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரித்தல் போன்றவை குறித்து விளக்கம் அளித்தாா்.
தொடா்ந்து, தொழில்நுட்ப வல்லுநா் காா்த்திக்பாண்டி பேசுகையில், வாழை சாகுபடி முறைகள், பயிா்களைத் தாக்கக்கூடிய நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விளக்கம் அளித்தாா். இதைத் தொடா்ந்து, ‘பயோ கன்சாா்சியா’ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரூ.2,500 மதிப்புள்ள இடு பொருள்கள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கபட்டன.
இந்த நிகழ்ச்சியில் பெருமாள்பட்டியைச் சோ்ந்த ஏராளமான வாழை விவசாயிகள் கலந்துகொண்டனா்.