வீடுகளுக்கு 20 லிட்டா் சுத்தரிக்கப்பட்ட குடிநீா்: அமைச்சா் அறிவிப்பு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 லிட்டா் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் ஒவ்வொரு வீட்டுக்கும் புதன்கிழமை (செப்டம்பா் 10) முதல் வழங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியின் சக்திநகா், கோவிந்தசாலை, முடக்கு மாரியம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் பிரிவு பறக்கும் படை 5 பிரிவாக காலை, பிற்பகல், மாலை என்று மூன்று வேளையும் குடிநீரைச் சேகரித்து பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், குடிநீரில் குளோரின் அளவைக் கூட்டவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு 20 லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கேன் புதன்கிழமை முதல் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், தேவைப்படும் இடங்களில் டேங்கா் லாரி மூலமாகவும் சுத்தமான குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.