காசா : உலக நாடுகளின் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான குரல் - உண்மையான அக்கறையா?
வீரகனூா் அருகே லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம், வீரகனூா் அருகே ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வீரகனூா் அருகே உள்ள வேப்பம்பூண்டி கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவா் ராமசாமி (51). இவரிடம், அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் மகேந்திரன் (46) தனது விவசாய நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா். அதற்கு விஏஓ ராமசாமி ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத மகேந்திரன், இதுகுறித்து சேலத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் தெரிவித்தாா்.
இதையடுத்து, சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா், மகேந்திரனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விஏஓ ராமசாமியிடம் கொடுக்க செய்தனா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், விஏஓ ராமசாமியை கைது செய்தனா்.