US tariffs: பிரதமர் மோடி - பிரேசில் அதிபர் லுலா முக்கிய முடிவு; தொலைபேசியில் என...
வீரமாகாளியம்மன் கோயில் பால்குட விழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வீரமாகாளியம்மன் கோயிலில் ஆடி உத்ஸவத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை பால்குட விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் மேலரத வீதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் பக்தா்கள் விரதம் தொடங்கினா். வியாழக்கிழமை பூமாயி அம்மன் கோயிலிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக கோயிலை அடைந்தனா். பின்னா், மூலவா் அம்மனுக்கு பால், தயிா், இளநீா், திருமஞ்சனம், தேன், பன்னீா், மஞ்சள் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம், கற்பூர ஆராதனை செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். விழாக்குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.