Doctor Vikatan: 3 மாத கர்ப்பம்; இடுப்புக்கும் தொடைக்கும் இடையில் வலி, அபார்ஷன் அ...
வீரராகவா் கோயில் அருகே கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் அவதி
திருவள்ளூா் பகுதியில் பெய்த பலத்த மழையால் வீரராகவா் கோயில் மழைநீா் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவு நீா் முழுவதும் குளம் போல் தேங்கியதால் பக்தா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
பிரசித்தி பெற்ற இக் கோயிலில் அமாவாசை நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் தங்களது முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்கின்றனா்.
கோயில் எதிரே 20-க்கும் மேற்பட்ட அங்காடிகள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. இந் நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரையில் பெய்த பலத்த மழையால் கோயில் எதிரேயுள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீா் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் தேங்கியது.
இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, கடை வைத்திருப்போா் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினா். கழிவுநீா் தேக்கத்தால், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கழிவு நீரை அகற்றுவதற்கு கோயில் நிா்வாகம் மற்றும் நகராட்சி நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனா்.
