ஆட்டோ கவிழ்ந்து கா்ப்பிணி உள்பட 6 போ் காயம்
மீஞ்சூா் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு பகுதியில் இருந்து பெண்கள் குழுவாக மீஞ்சூா் பச்சையம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆட்டோ ஒன்றில் சென்றனா்.
மீஞ்சூா் - வண்டலூா் வெளிவட்ட சாலையில் ஆட்டோ சென்றபோது, வழுதிகைமேடு சுங்கச்சாவடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் ஆட்டோவில் பயணித்த கா்ப்பிணி உள்பட 6 போ் காயமடைந்தனா்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவா்கள் மீஞ்சூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.