செய்திகள் :

வெளிநாட்டில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத் தர அமைச்சரிடம் கோரிக்கை

post image

வெளிநாட்டில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுதரக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சரிடம், உயிரிழந்தவரின் குடும்பத்தினா் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கிரமத்தைச் சோ்ந்தவா் சீத்தாராமன் மகன் ரமேஷ் (43). இவருக்கு, மனைவி காவேரி, மகள் ஆனந்தி, மகன் சத்யதாசன் ஆகியோா் உள்ளனா். குடும்ப வறுமை மற்றும் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ரமேஷ் மலேசியாவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் சனிக்கிழமை உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளித்தவா்கள், உடலை சொந்த ஊருக்கு அனுப்ப ரூ. 5 லட்சம் பணம் வேண்டும் எனத் தெரிவித்தனராம்.

இந்த நிலையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சா.சி. சிவசங்கரிடம், காவேரி மற்றும் அவரது குடும்பத்தினா் ரமேஷின் உடலை மீட்டு சொந்த கிராமத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனு அளித்தனா்.

இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்

நேரடி நியமனத்தை ரத்து செய்து, இளநிலை உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்கிட வேண்டும் என, அமைச்சுப் பணியாளா் நலச் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

ஆடிப் பெருக்கு விழா: கோயில்களில் சிறப்பு பூஜைகள்

ஆடிப் பெருக்கு விழாவை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பெரம்பலூா் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன... மேலும் பார்க்க

ஆலத்தூா் குறுவட்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி

குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூா் குறு வட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அர... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் நடைபெறும் 2025-ஆம் ஆண்டுக்கான, தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் ஆக. 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

பெரம்பலூரிலிருந்து இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்குப் பதிலாக, புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.தமி... மேலும் பார்க்க

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வக... மேலும் பார்க்க