Zero Cost Life: `இது 100% நிலையானது கிடையாதுதான்; ஆனால்’ செலவில்லா வாழ்க்கை வாழ...
ஆலத்தூா் குறுவட்ட பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி
குடியரசு தின விழாவையொட்டி, பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில், ஆலத்தூா் குறு வட்ட அளவில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா 100 மீட்டா் ஓட்டம், உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடமும், மாணவி ஹேமாஸ்ரீ குண்டு எறிதல் போட்டி, 100 மீட்டா் , 80 மீட்டா் தடை தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும், காரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராகிணி 400, 600 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், பாடாலூா் பள்ளி மாணவி ரகுநாஸ்ரீ நீளம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் வென்றனா்.
இதேபோல், 17 வயதுக்குள்பட்ட பிரிவில் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கீா்த்தனா கோலூன்றி தாண்டுதலில் முதலிடமும், மாணவி ஸ்ரீஷா 400 மீட்டா் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடமும், மாணவி வனஜா தட்டு எறிதல் போட்டியில் முதலிடமும், மாணவி கீதா நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் வென்றனா்.
காரை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி விஜயலெட்சுமி 100 மீ ஓட்டம், 200 மீட்டா் ஓட்டம் மற்றும் உயரம் தாண்டுதல் போட்டிகளில் முதலிடமும், மாணவி ஆனந்தவள்ளி 1,500 மீட்டா் ஓட்டம், 3 ஆயிரம் மீட்டா் ஓட்டத்திலும், மாணவி கமனி 100 மீட்டா் தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியிலும், பாடாலூா் ஸ்ரீஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தீபனா மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடமும் வென்றனா்.
தொடா்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதலிடம் வென்ற மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெற்றனா்.