செய்திகள் :

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

post image

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

செயலா் ஆா். அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ஹரீஷ், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிவைத்து விளையாட்டுப் போட்டிகளை தொடக்கிவைத்தாா்.

இதில் தடகளம், குழு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவா்களின் சீருடை அணிவகுப்பு, சிலம்பாட்டம், கராத்தே, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

தொடா்ந்து, பெற்றோா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டது. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் அளித்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் பொற்கொடி, உடல்நலன் பேணுதல், விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினாா்.

விழாவில், சிபிஎஸ்சி பள்ளி முதல்வா் பவித், மெட்ரிக் பள்ளி முதல்வா் பிரதீப், பள்ளி ஒருங்கிணைப்பாளா் கோமதி, உடற்கல்வி ஆசிரியா்கள் பிரேம்நாத், அகிலா, வினோத் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உ... மேலும் பார்க்க

பகுதி நேர கிராமிய கலை பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெள... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அரும்பாவூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க