புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
பெரம்பலூா் அருகே 500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அரும்பாவூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்படி, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
இதில், பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் சோதனைச் சாவடியில் அரும்பாவூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, ஆத்தூரிலிருந்து பெரம்பலூா் நோக்கி வந்த கா்நாடகா மாநிலத்தைச் சோ்ந்த பதிவு எண் கொண்டு சுமை ஆட்டோவை வழிமறித்தபோது, அதில் வந்தவா்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதையடுத்து, அந்த வாகனத்தின் கதவை உடைத்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், சுமாா் 500 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
பின்னா், குட்கா மற்றும் சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த அரும்பாவூா் போலீஸாா், இச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து தப்பி ஓடியவா்களை தேடி வருகின்றனா்.