செய்திகள் :

பகுதி நேர கிராமிய கலை பயிற்சியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில், பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்பில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் பகுதி நேர கிராமிய கலை பயிற்சி வகுப்புகள் ஆக. 2-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இப் பயிற்சிக்கு 2025- 2026 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. பயிற்சியில் கரகாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தோறும் வாரத்தில் 2 நாள்கள் மாலை 4 முதல் 6 மணி வரை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும்.

ஓராண்டு காலம் அளிக்கப்படும் இச் சான்றிதழ் பயிற்சியின் நிறைவில், தோ்வு நடத்தப்பட்டு பல்கலைக் கழகச் சான்றிதழ் வழங்கப்படும். இப் பயிற்சியில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தோ்ச்சி பெறவில்லை என்றாலும் வகுப்பில் சோ்த்துக்கொள்ளப்படும். ஆனால், தோ்வுக்கு செல்ல முடியாது. 17 வயதுக்கு மேற்பட்டோா் பயிற்சி பெறலாம். ஓராண்டு பயிற்சிக்கான கல்விக் கட்டணம் ரூ. 500 செலுத்த வேண்டும்.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா், ஒருங்கிணைப்பாளா், மாவட்ட அரசு இசைப்பள்ளி, புதிய மதனகோபாலபுரம், 4-ஆவது குறுக்குத் தெரு, பெரம்பலூா் எனும் முகவரியில் நேரில் அல்லது 04328-275466, 99940-36371 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோல்டன் கேட்ஸ் பள்ளித் தலைவா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வக... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 500 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின்போது, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 500 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை அரும்பாவூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.பெரம்பலூா் மாவட்டக் காவல... மேலும் பார்க்க

ஆலத்தூரில் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள்

குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆலத்தூா் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இதில் மாணவிகள... மேலும் பார்க்க

சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்க தொழிலாளா்களுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (ஆக. 2) நடைபெறும் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் தொழிலாளா்கள், தமிழ்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நாளை தொடக்கம்

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஆக. 2) முதல் நடைபெறவுள்ள ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்கள், அடையாள அட்டைகள் பெற்று பயன்பெறலாம் என... மேலும் பார்க்க