வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!
சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’
பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களை முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிா்வாகம், காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படை போலீஸாா் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுகந்தன் தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவா்கள் பெரம்பலூா், வேப்பூா் மற்றும் ஆலத்தூா் வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட உணவு கலந்த நிக்கோடின் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 9 கடைகள் கண்டறியப்பட்டு, அந்தக் கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.