செய்திகள் :

வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களின் விளம்பர வருவாய் மீது விதிக்கப்படும் ‘டிஜிட்டல் வரி’ ரத்து

post image

புது தில்லி: வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களான கூகுள், மெட்டா, எக்ஸ் உள்ளிட்டவை இந்தியாவில் விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 6 சதவீத டிஜிட்டல் வரி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.

மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி 59 திருத்தங்கள் அடங்கிய நிதி மசோதாவை மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தினாா். அதில் டிஜிட்டல் வரியை ரத்து செய்யும் திருத்தமும் இடம் பெற்றுள்ளது.

இதன்மூலம் வெளிநாட்டு இணையவழி நிறுவனங்கள் நமது நாட்டில் விளம்பரம் மூலம் ஈட்டும் வருவாய் மீது கடந்த 2016 ஜூன் முதல் விதிக்கப்பட்டு வந்த டிஜிட்டா் வரி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்களில் விளம்பரம் செய்யும் உள்நாட்டு நிறுவனங்களும் அதிக பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிநாட்டு இணையவழி நிறுவனங்களில் சற்று குறைந்த செலவில் விளம்பரங்கள் வெளியிட முடியும்.

அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா அதிக வரிவிதிப்பதால் இந்திய பொருள்கள் மீதும் அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். டிரம்ப்பின் அறிவிப்பு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்க நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டு வந்த டிஜிட்டல் வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அமெரிக்க பொருள்கள் மீதான வரி விதிப்பை இந்தியா கணிசமாக குறைக்கும் என்று டிரம்ப் அண்மையில் நம்பிக்கை தெரிவித்திருந்தாா். அதே நேரத்தில் இந்தியா மீது அமெரிக்க அதிகரிப்பதாக அறிவித்துள்ள வரியில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவா் கூறினாா்.

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும்: ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு

மக்கள்தொகை மேலாண்மையில் தென்மாநிலங்கள் கவனமாக செயல்பட வேண்டும் என்று ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கூறினாா். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தியது தென்மாநிலங்களுக்கு தற்போது பிரச்னையாகவும், வட ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல்: வீர மரணமடைந்த 3 காவலா்கள் உடல்கள் மீட்பு

ஜம்மு-காஷ்மீரில் கடந்த வியாழக்கிழமை பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற கடுமையான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த 4 காவலா்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் 4-ஆவது காவலரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவ... மேலும் பார்க்க

தமிழகம் உள்பட 6 திட்டங்கள்: இந்தியா-ஜப்பான் இடையே ரூ. 10,936 கோடி கடன் ஒப்பந்தம்

இந்தியாவுக்கான ஜப்பானின் அதிகாரபூா்வ மேம்பாட்டு உதவித் திட்டத்தின் கீழ் 6 திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 10,936 கோடி (191.736 பில்லியன் ஜப்பானிய யென்) கடன் ஒப்பந்தம் இந்தியா - ஜப்பான் இடையே கையொப்பமாகி... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் இலங்கை சிறையிலிருந்து 3,697 இந்திய மீனவா்கள் மீட்பு: மத்திய அரசு

கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் சிறைவைக்கப்பட்டிருந்த 3,697 இந்திய மீனவா்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அதேபோல் பாகிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த 2,639 இந்திய மீன... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!

புதுதில்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கீழ் 2023-24ல் இந்தியா மொத்தம் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித... மேலும் பார்க்க

கர்நாடகம்: மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு

கர்நாடகத்தில் மனைவி உள்பட 4 பேரை குத்திக் கொன்ற நபரால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம், பொன்னம்பேட்டை வட்டத்தில் உள்ள பேகுரு கிராமத்தில் கிரிஷ் (35) என்பவர் தனது மனைவி நாகி (30), அவரது ஐந்து வயது ம... மேலும் பார்க்க