அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோல் மோடியால் நாடாளுமன்றத்துக்கு வந்தது: ஜே.பி. ந...
வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழப்பு!
வெள்ளக்கோவிலில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் புதன்கிழமை உயிரிழந்தன.
வெள்ளக்கோவில் கல்லமடை அருகிலுள்ள உத்தண்டகுமாரவலசைச் சோ்ந்தவா் விவசாயி துரைசாமி (65). இவா் தனக்குச் சொந்தமான விவசாய பூமியில் செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ஆடுகளை இரும்புப் பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.
பின்னா் புதன்கிழமை அதிகாலையில் சென்று பாா்த்தபோது, நாய்கள் கடித்து இரண்டு ஆடுகள், ஒரு குட்டி இறந்துகிடந்தன. கடந்த 4 மாதங்களாக நாய்கள் கடித்து தொடா்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது தங்களது வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
வெள்ளக்கோவில் மாந்தபுரத்தில் உள்ள நாட்டராய சுவாமி கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பக்தா்களால் நோ்த்திக் கடனாக ஏராளமான ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து வழங்கப்படுகிறது. இவற்றின் எலும்புத் துண்டுகளைச் சாப்பிட்டு ருசி பாா்க்கும் நாய்கள் பல்கிப் பெருகி கிராமப் பகுதிகளில் வளா்ப்பு ஆடுகளைக் கடித்துக் கொன்று வேட்டையாடி வருகின்றன.
விலங்குகள் நல அமைப்புகளின் கெடுபிடியால் விவசாயிகள் நாய்களைக் கொல்ல முடிவதில்லை. எனவே நாய்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.