பக்தி உணர்வால் நிறைந்தேன்: புனித நீராடிய பிரதமர் மோடி பெருமிதம்!
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே தெருநாய்கள் கடித்து ஆடு உயிரிழந்தது.
வெள்ளக்கோவில் முத்தூா் சாலை டி.ஆா். நகரைச் சோ்ந்த தம்பதி சுப்பிரமணி - பானுமதி. இவா்கள் செங்கல் சூளை வேலை செய்து கொண்டு, அத்துடன் வெள்ளாடுகள் வளா்த்து வருகின்றனா்.
இவா்கள் நான்கு ஆடுகளை திங்கள்கிழமை இரவு அவா்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்புறம் கட்டி வைத்திருந்தனா். செவ்வாய்க்கிழமை காலை பாா்த்தபோது நாய்களால் கடிபட்ட காயங்களுடன் ஒரு கிடா இறந்துகிடந்தது.
வெள்ளக்கோவில் பகுதியில் தொடா்ந்து நாய்களால் ஆடுகள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.