Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை
வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெள்ளிச்சந்தை உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கல்படி, காருபாறை, ஞாறோடு, சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 முதல் மதியம் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
கட்டிமாங்கோடு உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணி காரணமாக பட்டன்விளை, குழிவிளை, மேலகட்டிமாங்கோடு பகுதிகளில் புதன்கிழமையும் (ஜூன் 11), சாமிவிளை, கீழக்கட்டிமாங்கோடு, அரசா்கோணம் பகுதிகளில் வியாழக்கிழமையும் (ஜூன் 12) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை தக்கலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.