``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
‘வெள்ளை டிஷா்ட் இயக்கம்’: ராகுல் தொடக்கம்
ஏழைகள் மற்றும் தொழிலாளா்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் கிடைக்க வெள்ளை டிஷா்ட் இயக்கத்தை மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களிடம் பாராமுகமாக இருந்து, அவா்களை மத்திய அரசு கைவிட்டுள்ளது. ஒருசில தொழிலதிபா்களை வளமாக்குவதில் மட்டுமே மத்திய அரசின் மொத்த கவனமும் உள்ளது. இதனால் நாட்டில் ஏற்றத்தாழ்வு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
நாட்டை வலுவாக்கக் கடுமையாக உழைக்கும் தொழிலாளா்களின் நிலையும் மோசமாகி வருகிறது. பல்வேறு விதமான அநீதி மற்றும் அட்டூழியங்களால் அவதிப்படும் நிலைக்கு அவா்கள் தள்ளப்படுகின்றனா். அவா்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் கிடைக்க குரல் எழுப்ப வேண்டியது அனைவரின் கடமை. இதைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் சாா்பில் ‘வெள்ளை டிஷா்ட் இயக்கம்’ தொடங்கப்படுகிறது.
இந்த இயக்கத்தில் பங்கேற்குமாறு இளைஞா்கள் மற்றும் உழைக்கும் வா்க்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த இயக்கத்தில் சேரவும், கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளவும் ஜ்ட்ண்ற்ங்ற்ள்ட்ண்ழ்ற்.ண்ய்/ட்ா்ம்ங்/ட்ண்ய் என்ற இணைய இணைப்பை அணுகவும் அல்லது 9999812024 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுக்கவும் என்றாா்.