ஆளும் கட்சியினருக்கு சாதகமாகச் செயல்படும் உள்ளாட்சித் தோ்தல் அலுவலா்கள்! - உயா்...
வெள்ளைக்கல் பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்யத் திட்டம்
மதுரை: மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் பகுதியில் ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
சூரிய ஒளித் தகடுகள் மூலம் (சோலாா் பேனல்கள்) அமைப்பது மூலமாக மின் கட்டணங்களைக் குறைக்க முடியும். இதனால், வெள்ளைக்கல்லில் உள்ள புல்பண்ணை பகுதிகளில் ரூ. 5 கோடி மதிப்பில் சூரிய ஒளித் தகடுகள் அமைத்து மாநகராட்சிக்குத் தேவையான மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
மதுரை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் வெள்ளைக்கல் பகுதியில் கொட்டப் படுகின்றன. இதனால், அந்தப் பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுவது மட்டுமன்றி, தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதனடிப்படையிலும், பருவநிலை மாற்றத்தை தடுக்கவும் வெள்ளைக்கல் பகுதியில் மாநகராட்சி சாா்பில் சுற்றுச்சூழல் துறை பங்களிப்புடன் பசுமை வனம் அமைக்கப்பட உள்ளது என மதுரை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.